Friday, March 26, 2010

பாராளுமன்றத்தேர்தல் - மட்டக்களப்பு மாவட்டம்

தேர்கள் என்றாலே இலங்கையைப் பொறுத்தவரையில் 30 வருட யுத்தமே தலைப்புச் செய்தியாகக் கொண்டுவரப்படும். ஆனால் இந்த யுத்தத்தின் விளைவுகள் பற்றி அதன் தாக்கங்கள் பற்றி நாம் யோசிப்பதுமில்லை. ஆக மொத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்திருக்கிறோமே தவிர நமது கல்வி,பொருளாதார, சமூகம் என்பனவற்றில் பாதகமான விளைவுகளையே பெற்றிருக்கிறோம் என்பதை யாரும் மறுக்கவோ தடுக்கவோ முடியாத ஒரு விடயம்.
இதனால் இம்முறை இடம்பெற இருக்கம் பாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமான விடயங்களை தமாங்கி நிற்கிறது. ஏனெனில் இதுவரை "சுய நிர்ணயம்" " சுய உரிமை" என்பனவற்றை பேசிப்பேசி இழந்து போய் நொந்துபோனோம். இனி இது பற்றி கதைக்கவோ முடியாத நிலைமை. இதனால் இதுபற்றி இந்தத்ததேர்தலில் தம்பட்டமடிக்கிறத விட்டுட்டு அபிவிருத்தி என்ற நோக்குடன் எமது பிள்ளைகளின் கல்வியில் விருத்தி பெருளாதாரக் கட்டமைப்பில் உயர்ச்சி வாழ்வாதார முன்னேற்றம் என்ற தொனிப்பொருளை பிரசாரக்கூட்டத்தில் முன் வையுங்கள்.
இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டமே அதிகளவு பாதிக்கப்படுகின்ற நிலைமையில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் காணப்படுவது மற்றைய விஷமிகளுக்கு சந்தோசமான விடயம்.
வடக்குக்கிழக்கு பிரிக்கப்பட பிரதான காரணமாக இருந்தது இந்த யுத்தம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதற்குக்காரணம் கருணா அம்மான் ஏற்படுத்திய முறையற்றதான நிகழ்வு. ஆனால் இதற்குக் கூட காரணம் வடக்கு அல்லது யாழ் என்ற தலைமைத்துவ தன்மையும் கிழக்கு என்கின்ற வேறுபாட்டுணர்வும்.ஆனாலும் தமிழ் என்கின்ற போது வடக்கு மற்றும் கிழக்கு என்று நாம் எண்ணுவதும் பிழையாகத்தான் தெரிகிறது. பல தடவைகள் நாம் முன்னேற வாய்ப்பிருந்தும் அவை பல காரணங்களால் தடைப்பட்டு கடைசியில் தமிழர் என்கின்ற நிலைமை கூட குழி தோண்டிப் புதைக்கப்படுகின்ற தன்மை இப்போது காணப்படுகிறது.
ஆதலால் இத்தேர்தல் மூலம் வாக்குச்சீட்டு எனும் ஆயுதப் பலத்தால் நாம் நம்மளை தலைநிமிர்த்த வேண்டியதாகிறது.
இதற்காக மட்டக்களப்பில் 28 சுயேட்சைகளும் 17 அரசியல் கட்சிகளும் போட்டியிடும் நிலமையால் தமிழ் பிரதிநிதித்துவம் குறைவடைகின்ற தன்மை இருப்பதை யாவரும். அவறிவர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு களமிறக்கிய வேட்பாளர்கள் பலம் இழந்தவர்களாக இருக்கின்றமையும் இவர்களின் தேர்தல் விஞ்ஞாபனமும் மட்டக்களப்பு மக்களுக்கு தலையில நெருப்பை மீண்டும் வைக்கிற தன்மையைக் கூட்டிக்கொள்கிறது. ஆகையால் த.தே.கூட்டமைப்புக்கு சரிவுகாலம் இருப்பதைக்காணக்கூடியதாக இருக்கிறது.
இதற்கிடையில் தனது பின்புத்தியைக் காட்டும் வெற்றிலையுடன் சேர்ந்து போட்டியிடுபவர்கள் தாங்கள் த.தே.கூட்டமைப்பின் காலில் விழுந்தபோதும் அவர்கள் தடுத்த காரணத்தினால் வெற்றிலையில் போட்டியிட வேண்டியதாயிற்று என்று புலம்புவது கேலித்தனத்தைக் கூட்டுகிறது. அப்படியானால் இக்கட்சியில் போட்டியிடுபவர்கள் தங்கள் சுயலாபம் கருதியே செயற்படுகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆகையால் இவர்கள் பாராளுமன்றம் போய் எந்த அமைச்சுப்பதவியைப் பொறுப்பேற்பது??? மட்டக்களப்புக்கு என்ன செய்யப்போறார்கள்.??? இக்கட்சியில் போட்டியிடுபவர்கள் கூறிக்கொள்கிறார்களாம் "வெற்றிபெறா விட்டாலும் ஏதாவது செயலாளர் பதவி கிடைக்குமாம் எண்டு." எனெனில் மட்டக்களப்பு கல்விக்கல்லூரி உருவாக்கத்துக்குக் காரணமானவர் தனது பத்துமாத பிரதியமைச்சர் பதிவியில் ஒன்றும் இம்மாவ்த்தில் செய்யாமல் போக இக்கல்லூரியின் ஆரம்பத்துக்கு தாம் வேறொரு செயலாளர் பதவியில் இருந்து தானாம் செய்தாராம்.
மொத்தத்தில் பலத்த போட்டிகளில் சுயலாபம் கருதி பல வேட்பாளர்கள் களம் இறங்கி மட்டக்களப்பு தமிழின பிரதிநிதித்துவத்தை குறைப்பது தமிழர்களாகிய நமக்கு வெட்கித்தலை குனிய வேண்டிய விடயம்.
இதனால் இப்போதும் அரசாங்கத்துடனும் சேர்ந்து தனது தனித்தன்மையை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தாங்கள் பாராளுமன்றத் தேர்தலில் முதலாவதாகக் குதிப்பதாகவும் ஆனால் தகுதியானவர்களை வேடடபாளர்களாக்கியிருப்பதும் வரவேற்கத்தக்க விடயம் தான். இருந்த போதிலும் இவர்கள் மத்தியில் இன்னமும் கருணா சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு இருப்பதால் இப்போதும் இவர்கள் தான் தமிழர் வாக்குகளை சிதறடிக்கிறார்கள் என்று முனகுவதும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அவர்கள் நிப்பாட்டிய வேட்பாளர்கள் கட்டாயம் பல முன்னெடுப்புக்களுடன் செயற்பட வாய்ப்புள்ளது. காரணம் ஏற்கனவே கிழக்கு மாகாணசபையை தன்னகத்தே கொண்டாளுவதால் இவர்களுக்கும் கணிசமான வாக்குகளும் கிடைக்கும். ஆனாலும் முதலமைச்சர் மட்டக்களப்பின் தென்பகுதிக்கும் படுவான்கரைப்பகுதிக்கும் தனது வேலைத்திட்டங்களை செயல்ப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்படுகிறது. ஆனாலும் த.வி.பு களின் தேர்தல் பிரச்சாரம் மிகவும் மும்முரமாகவும் திட்டமிட்டதாகவும் இருப்பது இவர்களின் வரலாறு புதுப்பிக்கப்படும் என்பதும் ஒரு திண்ணம்.

இதற்கிடையில் தபால் மூல வாக்களிப்பின் போது கடைசியாக வாக்களின்னும் போதுதான் நிறைய படிச்சவங்க கூட யோசிக்கும் தன்மை ஏற்பட்டதாக அந்த அரச உத்தியோகர்த்தர்கள் கூறக்கேட்டது இன்னும் மனசக் குத்திக்கிட்டு இருக்கு...
மீண்டும் கூத்தன் கூத்தாடுவான்.............

0 comments: