கிழக்கு மதகாணத்தில் அம்பாறை மாவட்டம் முற்றுமுழுதாக சிங்கள மற்றும் முஸ்லிம்களின் ஆதிக்கத்தினால் தமிழ்மக்கள் ஒடுக்கப்பட்டு வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதனால் தமிழ்ப் பிரதேசங்களும் சிங்கள இராச்சியமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு துணைபோகும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டிஇடும் தமிழர்கள் இது பற்றி உணர முடியாமல் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இதைப் போல திருகோணமலை மாவட்டத்தின் நிலைமை கூட தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை இழப்பது போலத் தெரிகிறது.. இது சம்பந்தமாக விரிவான விளக்கியிருக்கிறது ஒருவலைப்பதிவு
இது சிங்கள அரசியல் தலைமைத்துவத்தின் தமிழின மக்களுக்கான வீழ்ச்சியை ஏற்படுத்தி சிங்கள தலைமைத்துவத்தை நிலைநிறுத்தும் தன்மையை வெளிக்கொணர்கிறது. ஏனெனில் இலங்கை அரசு வடக்கு மாகாணத்தை தனிமைப்படுத்தி கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதிநிதிக்துவத்தை பாராளுமன்றத்தில் குறைத்து புதிய அரசியல் தந்துரோபாயங்களை மேற்கொண்டு தமிழர் பிரச்சனையை ஓரங்கட்டப்பார்க்கிறது.
இதே போல் மட்டக்களப்பிலும் தனது கூலிப்படைகளால் புதிய புதிய கட்சிகளையும் அதிக சுயேட்சைகளையும் வேட்பாளர்களையும் போட்டியிட வைத்து தமிழின பிரதிநிதிகளைக் குறைத்து முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளைக் கூட்டிக்கொள்ள அரசியல் தன்மையைக்காட்டுகிறது.
இதனால் கிழக்கு மாகாணத்துக்கோ வடக்கு மாகாணத்துக்கோ தனித் தலைமைத்துவங்களோ அல்லது ஒட்டுமொத்த தமிழ்ப் பிரதிநிதித்துவ தலைமைத்துவங்களோ உருவாவதைத் தடுக்கும் செய்ற்பாடாக இது அமைகிறது.
ஆனால் தற்போது கிழக்கு மாகாணத்துக்கு உரிய தனித்துவமான கட்சியும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியுமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி களம் இறங்கியிருப்பது தமிழ்ப் பிரதிநிதிகளை அதிகரிக்கவே. மாறாக இவர்கள் மீது ஆயுதக்கட்சி என்றும் தமிழ்துரோகப் பிழையும் கூறப்படுவதால் சற்று பின்னடைவை எதிர்கொள்வது தெரிகிறது. ஆனால் இக்கட்சி மட்டுமே தமிழர்களின் தனியான கிழக்கு மக்களின் உாழமையான கட்சியாகும் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இல்லையேல் இவர்கள் அரசுடன் இணைந்து போட்டியிட்டிருக்கலாம் அல்லது தங்கள் சுயலாபத்துக்காக எதிர்க்கட்சியுடன் பேரம் பேசி இருக்கலாம். இவற்றையெல்லாம் விடுத்து தனிக்கட்சியாக அதுவும் வாக்கு வங்கிகளை அதிகளவில் கொண்ட தமிழரசுக் கட்சிகளுக்கு சவால் விடுத்து இறங்கியருப்பது வரவேற்கத்தக்க விடயம். இதனை விட சிங்கள அரசியல் தந்திரங்களுக்கு எதிராக குரல் கொடுத்து யாராவது தமிழக்கட்சிக்கே வோட்டுப்போடுங்கள் என்றும் வீட்டுக்கு போடாவிட்டால் வோட்டுக்கு(Boat)க்கு போடுங்கோ என்றும் வீட்டின் தலைமைகள் இதுவரை மட்டக்களப்புக்கு வந்த சரித்திரம் இல்லை இம்மட்டக்களப்பை ஒதுக்கி வேடிக்கைபார்த்ததே இக்கட்சியின் தலைவர்கள் தங்கள் சுயலாபம் கருதி செயற்பட்டு த.வி.பு களை சாட்டுக்கூறி தாங்கள் சுயஆட்சி சுயமானிலம் என்று வாயைப்பிளந்து அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் நிலை நிறுத்தப்பட்டவர்களே இவர்கள்.
அவர்களால் தமிழினம் அழிந்தபோது தங்கள் பதிவிகளைத்துறந்ார்களா??? இல்லை இதனை மறுத்து ஏதாச்சும் பெரியளவில் செய்தார்களா??? வெறுமனே ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்ஃ அரசியல் குளிர்காய்ந்தார்கள். இப்போது மட்டக்களப்பிற்கு வருகை தந்து மீண்டும் பிச்சை கேட்கிறார்கள்.
ஆக முதலமைச்சர் தலைமைதாங்கும் த.ம.வி.பு கட்சி அதன் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் இவர்களைப்பற்றி காரசாரமாக கதைத்து வருகிறது வரவேற்கத்தக்கது.
கிழக்கு மாகாணத்திலே ஒரு தலைமை உருவாகி கிழக்கு மாகான சபை மூலம் எமது பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. எமது மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.அரசியல் அபிலாசைகளுக்காக நாம் வாக்களிக்காமல் தமிழ்ப்பிரதேச அபிவிருத்திக்கும் மட்டக்களப்பு மண்ணின் உயர்ச்சிக்காகவும் படகுச்சின்னத்துக்க்காக வாக்களிப்பது சாலச்சிறந்தது.