Wednesday, April 7, 2010

கூட்டமைப்புக்கு எதிராகவும் துண்டுப்பிரசுரங்கள்

கூட்டமைப்புக்கு எதிராகவும் துண்டுப்பிரசுரங்கள் விழிதெழும்நேரமிது

மட்டகளப்பு வாக்கு வங்கி த.தே.கூட்டமைப்பு என்ற ஒரு நிலை இந்தத்தேர்தலுக்கு முன்னர் காணப்பட்டது. ஆனால் இந்தமுறை இவர்களின் போக்கு காரணமாக அவர்களின் தலைமைத்துவ சீரழிவின் காரணமாக இதுவரை உடுத்திக்கொண்ட வேசங்கள் தெரியவந்ததையிட்டு இப்பொழுது தமது பிரதிநிதிகளை இழந்து தமிழ்மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளாகின்றனர். இதனால் விழித்தெழுந்த மட்டக்களப்பு சமூகம் கூட இப்பொழுது இவர்களை நம்பி பயனில்லை என்ற கருத்தினை வைத்து துண்டுப்பிரசுங்களை வெளியிட்டு வருது இவர்களின் இருப்பை குறைத்துக்கொண்ட நிலைப்பாடாக இருக்கிறது தெட்டத்தெளிவாகப் புலப்படுகிறது.


Tuesday, April 6, 2010

சிந்திக்கும் இறுதி நேரம்

பாராளுமன்றத் தேர்தல் நாளை மறுதினம். படக் படக்கென்று த. தே. கூட்டமைப்பு இருக்கும் தருணம். மட்டக்களப்பில் தேர்தல் முடிவுகள் எதிர்வுகூறப்படுகின்றது. வெற்றிப்படகு முதன்முதலில் ஆட்சிப்பீடம் ஏற்கப்போவது முடிவாகிவிட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனது தேர்தல் பிரச்சாரங்களை 04-04-2010 ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு கொண்டுவந்தது. தமது இறுதிப்பிரச்சாரத்திற்கு 8000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர். முற்றிலும் வெற்றி நிச்சயம் என்ற தொனிப்பொருள் கண்கூடாகத் தெரிந்தது.
அனைத்து வேட்பாளர்களும் தங்கள் கருத்துரைகளை வெளியிட்டு படகின்வெற்றியை உறுதிப்படுத்தினர்.
இன்றைய நிலையில் வெற்றிலைவேட்பாளர்கள் பதபதைத்து தங்களுக்கிடையில் பல துண்டுப்பிரசுங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். பாவப்படவேணும் போல இருக்கு. கணேசமூர்த்தி வெளிநாட்டுக்கு மீண்டும் போவது உறுதியாகிவட்ட நிலையில் வாங்கிய பணத்துக்காக சில மூடத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன் துண்டுப்பிரசுங்களை வெளியிடுவதில் அக்கறையாக உள்ளார்.
மட்டக்களப்பில் இப்போது த.ம.வி.பு கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டு பல த.தே.கூ வேட்பாளர்கள் குழப்பமைந்துள்ளதாக தகவல் வெளிவருகிறது. காரணம் தலைமை வேட்பாளர் தனக்கு மட்டும் வோட்டுப்போடுங்கோ எண்டும் மற்றவர்களுக்கு வோட்டுப்போட வேண்டாம் என்றும் தனது பிரச்சாரத்தில் அவ்வப்போது குறிப்பிட்டுவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மற்றைய சக வேட்பாளர்கள் தங்களுக்கு ஆசனம் இல்லை என்ற நிலைமையில் இப்போது மட்டக்களப்புக்குரிய தனித்துவக்கட்சிக்கு மாத்திரம் போடுமாறு தங்கள் ஆதரவாளர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பது தலைமை வேட்பாளருக்கு கோபத்தை தூண்டுதாம் இதனால் இவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கபோவதாக எச்சரித்துள்ளார்.
மட்டக்களப்பில் வேறொரு பொருத்தமான தலைமை வேட்பாளரை நியமித்திருந்தால் இந்தப்பிரச்சனை வந்திருக்காது. இவரின் ஆசன நப்பாசையாலதானாம் பல வேட்பாளர்கள் வெற்றிலையுடனும் சூரியனுடனும் சேர்ந்தார்களாம். நவத்தார் மட்டக்களப்பு மண்ணுக்கு தமிழ் துரோகம் பண்ணுவதாக வெற்றிலை வேட்பாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதற்கெல்லாம் பல இலட்சக்கணக்கான காசுகளை வாங்கியவர் துண்டுப்பபிரசுரம் வெளியிடுவதிலே அக்கறை செலுத்தியுள்ளார். இதனிடையில் காத்தான்குடி வேட்பாளர்கள் ஏறாவூருக்கு போக முடியாத நிலையும் அதேபோல் ஏறாவூர்க்காரர்கள் காத்தான்குடிக்கும் போக முடியாத நிலையை இரு வெற்றிலை வேட்பாளர்கள் தோற்றிவைத்துள்ளனர்.
ஆனாலும் தமிழ்மக்கள் தமிழ்ச்சிந்தனையுடன் புதிய அபிவிருத்தி என்ற நோக்கத்துடனும் சிந்திக்கிறது நல்ல விடயம். இதற்கிடையில் இன்னொரு துண்டுப்பிரசுரம் வெளிவிடப்பட்டிருக்கிறதாம் "வீட்டில் வழியும் வோட்டுக்கள் படகுக்கே" என்று ஆனால் இவர்களுக்குத் தெரியாதா இப்போ வீடு இல்லாத நிலையில் படகின் மூலம் தான் வீடு கட்டப்போகிறோம் என்று...
மட்டக்களப்பு தமிழ்பேசும் சமூகம் விழிப்படைந்திருப்பது வரவேற்க்கத்தக்க விடயம். இப்போதுதான் சரியான தெரிவை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அபிவிருத்தி என்ற முனைப்போடு களம் இறக்கியிருக்கிறார்கள்.
படகின் வெற்றி கிழக்கின் அபிவிருத்தி என்பது வரலாற்றின் சிறப்பு.

Sunday, April 4, 2010

மேள தாள வாத்தியங்களும் பிச்சைகேட்கும் இரவு

என்ன இது புதுத்தலைப்பாக இருக்கு எண்டு யோசிக்காதீங்க மட்டக்களப்பு களுதாவளைக் கிராமத்தில் மாபெரும் கூட்டம்( மொத்தமா 20 பேர் இருப்பர்) வெத்திலைக்கு வோட்டுப்போடுங்கோ எண்டு குணத்தார் தலைமையில் ஆட்கள் இருபதளவில் இப்பொழுது பறைமேள தாளங்களுடன் வீடு வீடாக தட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். பாவம் நித்திரைகொள்ள விடமாட்டார்கள் வெத்திலை போடுற நேரமா இது. ஒற்றுமையின் சின்னம் இவர் மேளங்களுடன் தானா பிச்சைகேட்பது. கட்சிக்காக அரசு கொடுத்த காசு எங்கே போயிற்று??? கோயில் தலைவர் கூட வாக்குவாதப்பட்டு குடும்பத்திலும் தமிழுக்காக படகேற இவர் ஊர் மக்கள் பிழையாக நடப்பதை தட்டிக்கேட்கப்போக கோயில் தலைமையில் இவரை நீக்கி தற்காலிகமாக வேறொருவரை (சிற்பவேலைக்காரர்) வைத்திருப்பதாக உள்ளார்ந்த தகவல். இதை விட நேற்று இரவு 8.30 மணிக்குப்பின்னர் தொண்டை நோக கத்திக்கத்தி வோட்டுப்போடுங்கோ வெத்திலைக்கு எண்டு இரவுப்பிரச்சாரம் பண்ணிணார்கள் இந்த வெத்திலைக்காரர்கள் களுதாவளை மக்கள் இப்போ நல்லா யோசித்து முடிவெடுத்துவிட்டார்கள் அபிவிருத்தி எனும் படகில் ஏறி வெற்றிபெறுவது தான் தமது திண்ணம் என்று.

பாவம் குணத்தாருக்கு கணேசமூர்த்தி இன்னொரு தலையிடியாம் இன்று களுதாவளைக்கிராமத்துக்காக ஒரு துண்டுப்பிரசுரம் போடடிருக்கிறார். இதைவிட களுதாவளை மக்களில் தனக்கு செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும் தனகு வோட்டுக்கள் உண்மையில் தமிழ்ப்பிரதிநிதிகளை குறைக்கும் போக்குக் காணப்படுவதாகவும் தனது வேலைத்தள சக உத்தியோகத்தர்களிடம் பகிர்ந்திருக்கிறார். நிலைமை இப்படி மோசமாகிக்கொண்டிருக்க சிலவேளை குணத்தார் ஒதுங்கும் நிலைமை வெகு தொலைவில் இல்லை இது கூத்தனின் கூற்று...

களுதாவளையில் கணேசமூர்த்தி அவர்களினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்.

களுதாவளையில் கணேசமூர்த்தி அவர்களினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்.

Friday, April 2, 2010

சிங்கள அரசியலும் துணைபோகும் தமிழ் விசமிகளும்

கிழக்கு மதகாணத்தில் அம்பாறை மாவட்டம் முற்றுமுழுதாக சிங்கள மற்றும் முஸ்லிம்களின் ஆதிக்கத்தினால் தமிழ்மக்கள் ஒடுக்கப்பட்டு வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதனால் தமிழ்ப் பிரதேசங்களும் சிங்கள இராச்சியமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு துணைபோகும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டிஇடும் தமிழர்கள் இது பற்றி உணர முடியாமல் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இதைப் போல திருகோணமலை மாவட்டத்தின் நிலைமை கூட தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை இழப்பது போலத் தெரிகிறது.. இது சம்பந்தமாக விரிவான விளக்கியிருக்கிறது ஒருவலைப்பதிவு
இது சிங்கள அரசியல் தலைமைத்துவத்தின் தமிழின மக்களுக்கான வீழ்ச்சியை ஏற்படுத்தி சிங்கள தலைமைத்துவத்தை நிலைநிறுத்தும் தன்மையை வெளிக்கொணர்கிறது. ஏனெனில் இலங்கை அரசு வடக்கு மாகாணத்தை தனிமைப்படுத்தி கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதிநிதிக்துவத்தை பாராளுமன்றத்தில் குறைத்து புதிய அரசியல் தந்துரோபாயங்களை மேற்கொண்டு தமிழர் பிரச்சனையை ஓரங்கட்டப்பார்க்கிறது.
இதே போல் மட்டக்களப்பிலும் தனது கூலிப்படைகளால் புதிய புதிய கட்சிகளையும் அதிக சுயேட்சைகளையும் வேட்பாளர்களையும் போட்டியிட வைத்து தமிழின பிரதிநிதிகளைக் குறைத்து முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளைக் கூட்டிக்கொள்ள அரசியல் தன்மையைக்காட்டுகிறது.
இதனால் கிழக்கு மாகாணத்துக்கோ வடக்கு மாகாணத்துக்கோ தனித் தலைமைத்துவங்களோ அல்லது ஒட்டுமொத்த தமிழ்ப் பிரதிநிதித்துவ தலைமைத்துவங்களோ உருவாவதைத் தடுக்கும் செய்ற்பாடாக இது அமைகிறது.
ஆனால் தற்போது கிழக்கு மாகாணத்துக்கு உரிய தனித்துவமான கட்சியும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியுமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி களம் இறங்கியிருப்பது தமிழ்ப் பிரதிநிதிகளை அதிகரிக்கவே. மாறாக இவர்கள் மீது ஆயுதக்கட்சி என்றும் தமிழ்துரோகப் பிழையும் கூறப்படுவதால் சற்று பின்னடைவை எதிர்கொள்வது தெரிகிறது. ஆனால் இக்கட்சி மட்டுமே தமிழர்களின் தனியான கிழக்கு மக்களின் உாழமையான கட்சியாகும் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இல்லையேல் இவர்கள் அரசுடன் இணைந்து போட்டியிட்டிருக்கலாம் அல்லது தங்கள் சுயலாபத்துக்காக எதிர்க்கட்சியுடன் பேரம் பேசி இருக்கலாம். இவற்றையெல்லாம் விடுத்து தனிக்கட்சியாக அதுவும் வாக்கு வங்கிகளை அதிகளவில் கொண்ட தமிழரசுக் கட்சிகளுக்கு சவால் விடுத்து இறங்கியருப்பது வரவேற்கத்தக்க விடயம். இதனை விட சிங்கள அரசியல் தந்திரங்களுக்கு எதிராக குரல் கொடுத்து யாராவது தமிழக்கட்சிக்கே வோட்டுப்போடுங்கள் என்றும் வீட்டுக்கு போடாவிட்டால் வோட்டுக்கு(Boat)க்கு போடுங்கோ என்றும் வீட்டின் தலைமைகள் இதுவரை மட்டக்களப்புக்கு வந்த சரித்திரம் இல்லை இம்மட்டக்களப்பை ஒதுக்கி வேடிக்கைபார்த்ததே இக்கட்சியின் தலைவர்கள் தங்கள் சுயலாபம் கருதி செயற்பட்டு த.வி.பு களை சாட்டுக்கூறி தாங்கள் சுயஆட்சி சுயமானிலம் என்று வாயைப்பிளந்து அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் நிலை நிறுத்தப்பட்டவர்களே இவர்கள்.
அவர்களால் தமிழினம் அழிந்தபோது தங்கள் பதிவிகளைத்துறந்ார்களா??? இல்லை இதனை மறுத்து ஏதாச்சும் பெரியளவில் செய்தார்களா??? வெறுமனே ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்ஃ அரசியல் குளிர்காய்ந்தார்கள். இப்போது மட்டக்களப்பிற்கு வருகை தந்து மீண்டும் பிச்சை கேட்கிறார்கள்.
ஆக முதலமைச்சர் தலைமைதாங்கும் த.ம.வி.பு கட்சி அதன் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் இவர்களைப்பற்றி காரசாரமாக கதைத்து வருகிறது வரவேற்கத்தக்கது.
கிழக்கு மாகாணத்திலே ஒரு தலைமை உருவாகி கிழக்கு மாகான சபை மூலம் எமது பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. எமது மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.அரசியல் அபிலாசைகளுக்காக நாம் வாக்களிக்காமல் தமிழ்ப்பிரதேச அபிவிருத்திக்கும் மட்டக்களப்பு மண்ணின் உயர்ச்சிக்காகவும் படகுச்சின்னத்துக்க்காக வாக்களிப்பது சாலச்சிறந்தது.

Monday, March 29, 2010

விலைபோகும் வாக்குகள் - மட்டக்களப்பு

மட்டக்களப்புத் தேர்தல் ஏனோ தானோ ஆனதாக இருக்கிறது.. தமிழர்கள் மத்தியில் தான் குழப்ப நிலை என்றால் முஸ்லிம் சமூகத்திலும் இதே நிலைமை தான்... காத்தான்குடி ஹிஸ் வேட்பாளர் தங்கள் ஊரில் சொல்லியிருக்கிறார் "நீங்க வோட்டுப் போடாட்டிலும் பரவாயில்ல எனக்குத் தமிழ் மக்கள் போடுவானுகள். அவனுகளுக்கு காசக்காட்டினால் போதும்" என்று தமது இருப்பு கை நழுவிப்போகின்றதால் இவ'வாறு புலம்பியிருக்கிறார்.

இது சரி போலத்தான் தெரிகிறது.. இன்று ஒரு பிரசாரக்கூட்டத்தில் தமிழ்ப்பிரதேசத்தில் இவருக்கு பாராட்டு விழாவாம் அங்கு இவர் உரை நிகழ்த்தும் போது இவரது செயலாளர் கூறியிருக்கிறார் " தமிழர்களே நீங்கள் வோட்டுப்பாடாவிட்டாலும் பரவாயில்ல நீங்க தந்த இந்த மரியாதையும் பாராட்டு நிகழ்வும் எங்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் வாழ்நாளில் மறக்கமுடியாதான நிகழ்வாக இது உள்ளது" என்றிருக்கிறார்.
இத்தமிழ்கிராமத்திற்கு இந்த ஹிஸ் ஆனவர் பல உதவிகளைச் செய்திருக்கிறாராம். அதனால் இவருக்குத் தானாம் வோட்டுப்போடனுமாம்.
இவருக்குத் தெரியாது இதற்கு முதல் அமிர் நாயகன் தான் வந்து இதே பாராட்டையும் வாழ்த்தையும் பெற்றுச் சென்றவர்.
இதுக்கெல்லாம் காரணமானவர் ஒரு பிள்ளையார் கோவில் கட்டுராராம். அவரின் தம்பி கூட ஒரு போராளி இசைத்துறையில் விற்பன்னன் சீயான் சேது போன்றவர் .இப்போது கட்டாரில் வசிக்கிறார்.
தமிழினமே கேளடா
அழிவது யாரடா
அழிப்பது யாரடா

Sunday, March 28, 2010

மட்டக்களப்பில் இன்றைய அரசியல் -01

பாராளுமன்றத்தேர்தல் 2010 இல் மட்டக்களப்பின் அரசியல் தாக்கம் எவ்வாறு இருக்கப்போகிறது என்ற எண்ணம் மட்டக்களப்பில் மட்டுமல்லாது முழு இலங்கையையும் ஏன் எல்லாத் தமிழர்களையும் பாதிக்கப்படக்கூயதாக இருக்கின்ற விடயமாக உள்ளது.

தமிழர் பிரச்சனை என்றும் தமிழ் இனப்பிரச்சனை என்றும் தலையாய பிரதான செய்தியாகவும் பிரச்சாரமாகவும் கொண்டு கடந்த மூன்று தசாப்பதங்களாக இருந்துவந்த தேர்தலும் அதற்கு துணைபோந்தவர்களும் ஆக தமிழ் மக்கள் பல வற்றை இழந்து உயிர்களையும் இழந்து இனி இழப்பதற்கு தமிழர் என்ற பெயர் மட்டுமே எஞ்சியுள்ளது.
இந்த யுத்தத்தினை மையப்படுத்திய எல்லா அரசியலும் ஏனைய சமூகங்களும் தம்மை நீடித்து நிலைக்கும் தன்மைக்கும் தங்கள் அரசியல் அபிலாசைகளுக்கும் துணைபோனவர்களால் தமிழர் பிரச்சனை தீர்வுகாண முடியாமல் போய்க்கொண்டிருப்பதால் வெறுமனே நாம் எப்போதும் எதிர்கட்சியில் இருந்து ஊடகங்களுக்கு குரல் கொடுக்கும் ஊதுகுழல்களே!!! சற்று விழித்திடுங்கள் இரண்டு தசாப்பத்தகளுக்கு மேலாக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை வைத்திருந்து என்ன லாபம். இதுவரை அவாகளால் கேள்வியும் பதில் கிடைக்காமல் போன ஊடகங்களை அழைத்து தாங்கள் செயற்படுகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பதால் என்ன தமிழ் மக்களுக்கு கிடைத்தது.??கிடைக்கிறது??? கிடைக்கப்போகிறது.???

இதனால் சிந்தியுங்கள் சிந்தியுங்கள் என்று தமிழ் மக்களை சொல்லுவதால் எல்லா பாமர மக்களுக்கும் இத்தால் என்ன சொல்லப்போகிறார்கள். இதுவரை நாம் இருந்த நிலை வேறு இனி நாம் வேறு பாதையில் சுயாட்சி சுய உரிமை இனித்தான் கேட்கலாம் என்று இன்னுமின்னும் ஏமாற்ற விளைகிறார்களா???

ஆகவே புதிய தலைமுறைகளுக்கும் புதிய விடயங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து புதிய அரசில் தந்துரோபாயங்களை நிலை நிறுத்துவதற்காக இனி இணைவோம். ஏனெனில் பழமைவாதிகள் மாறமாட்டாரகள் இதுவரை தாம் அனுபவித்து வந்த சுகபோக வாழ்க்கையை விட்டுக்காடுப்பதில் இவர்களுக்கு கஸ்டமான விடயம்.
இதன் காரணமாக இத்தேர்தலில் தமிழமக்கள் தங்கள் பிரதேசங்களில் அபிவிருத்தியை மையப்படுத்திய கட்சிக்கும் அதில் இனம் மாறாத நல்ல கொள்ளைகளை வகுத்துக்கொண்டவர்களை தெரிவு செய்தல் தமிழர்களாகிய நமது கடமையே.

மட்டக்களப்பில் இன்னும் என்ன என்ன அபிவிருத்திகளை மேற்கொள்ளப்பட வேண்டுமென அடுத்த பதிவில் பகிர்கிறேன்.
வாருங்கள் ஊர் கூடி
தமிழ் தேர் இழுப்போம்
பலம் கொள்வோம்.

Friday, March 26, 2010

பாராளுமன்றத்தேர்தல் - மட்டக்களப்பு மாவட்டம்

தேர்கள் என்றாலே இலங்கையைப் பொறுத்தவரையில் 30 வருட யுத்தமே தலைப்புச் செய்தியாகக் கொண்டுவரப்படும். ஆனால் இந்த யுத்தத்தின் விளைவுகள் பற்றி அதன் தாக்கங்கள் பற்றி நாம் யோசிப்பதுமில்லை. ஆக மொத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்திருக்கிறோமே தவிர நமது கல்வி,பொருளாதார, சமூகம் என்பனவற்றில் பாதகமான விளைவுகளையே பெற்றிருக்கிறோம் என்பதை யாரும் மறுக்கவோ தடுக்கவோ முடியாத ஒரு விடயம்.
இதனால் இம்முறை இடம்பெற இருக்கம் பாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமான விடயங்களை தமாங்கி நிற்கிறது. ஏனெனில் இதுவரை "சுய நிர்ணயம்" " சுய உரிமை" என்பனவற்றை பேசிப்பேசி இழந்து போய் நொந்துபோனோம். இனி இது பற்றி கதைக்கவோ முடியாத நிலைமை. இதனால் இதுபற்றி இந்தத்ததேர்தலில் தம்பட்டமடிக்கிறத விட்டுட்டு அபிவிருத்தி என்ற நோக்குடன் எமது பிள்ளைகளின் கல்வியில் விருத்தி பெருளாதாரக் கட்டமைப்பில் உயர்ச்சி வாழ்வாதார முன்னேற்றம் என்ற தொனிப்பொருளை பிரசாரக்கூட்டத்தில் முன் வையுங்கள்.
இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டமே அதிகளவு பாதிக்கப்படுகின்ற நிலைமையில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் காணப்படுவது மற்றைய விஷமிகளுக்கு சந்தோசமான விடயம்.
வடக்குக்கிழக்கு பிரிக்கப்பட பிரதான காரணமாக இருந்தது இந்த யுத்தம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதற்குக்காரணம் கருணா அம்மான் ஏற்படுத்திய முறையற்றதான நிகழ்வு. ஆனால் இதற்குக் கூட காரணம் வடக்கு அல்லது யாழ் என்ற தலைமைத்துவ தன்மையும் கிழக்கு என்கின்ற வேறுபாட்டுணர்வும்.ஆனாலும் தமிழ் என்கின்ற போது வடக்கு மற்றும் கிழக்கு என்று நாம் எண்ணுவதும் பிழையாகத்தான் தெரிகிறது. பல தடவைகள் நாம் முன்னேற வாய்ப்பிருந்தும் அவை பல காரணங்களால் தடைப்பட்டு கடைசியில் தமிழர் என்கின்ற நிலைமை கூட குழி தோண்டிப் புதைக்கப்படுகின்ற தன்மை இப்போது காணப்படுகிறது.
ஆதலால் இத்தேர்தல் மூலம் வாக்குச்சீட்டு எனும் ஆயுதப் பலத்தால் நாம் நம்மளை தலைநிமிர்த்த வேண்டியதாகிறது.
இதற்காக மட்டக்களப்பில் 28 சுயேட்சைகளும் 17 அரசியல் கட்சிகளும் போட்டியிடும் நிலமையால் தமிழ் பிரதிநிதித்துவம் குறைவடைகின்ற தன்மை இருப்பதை யாவரும். அவறிவர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு களமிறக்கிய வேட்பாளர்கள் பலம் இழந்தவர்களாக இருக்கின்றமையும் இவர்களின் தேர்தல் விஞ்ஞாபனமும் மட்டக்களப்பு மக்களுக்கு தலையில நெருப்பை மீண்டும் வைக்கிற தன்மையைக் கூட்டிக்கொள்கிறது. ஆகையால் த.தே.கூட்டமைப்புக்கு சரிவுகாலம் இருப்பதைக்காணக்கூடியதாக இருக்கிறது.
இதற்கிடையில் தனது பின்புத்தியைக் காட்டும் வெற்றிலையுடன் சேர்ந்து போட்டியிடுபவர்கள் தாங்கள் த.தே.கூட்டமைப்பின் காலில் விழுந்தபோதும் அவர்கள் தடுத்த காரணத்தினால் வெற்றிலையில் போட்டியிட வேண்டியதாயிற்று என்று புலம்புவது கேலித்தனத்தைக் கூட்டுகிறது. அப்படியானால் இக்கட்சியில் போட்டியிடுபவர்கள் தங்கள் சுயலாபம் கருதியே செயற்படுகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆகையால் இவர்கள் பாராளுமன்றம் போய் எந்த அமைச்சுப்பதவியைப் பொறுப்பேற்பது??? மட்டக்களப்புக்கு என்ன செய்யப்போறார்கள்.??? இக்கட்சியில் போட்டியிடுபவர்கள் கூறிக்கொள்கிறார்களாம் "வெற்றிபெறா விட்டாலும் ஏதாவது செயலாளர் பதவி கிடைக்குமாம் எண்டு." எனெனில் மட்டக்களப்பு கல்விக்கல்லூரி உருவாக்கத்துக்குக் காரணமானவர் தனது பத்துமாத பிரதியமைச்சர் பதிவியில் ஒன்றும் இம்மாவ்த்தில் செய்யாமல் போக இக்கல்லூரியின் ஆரம்பத்துக்கு தாம் வேறொரு செயலாளர் பதவியில் இருந்து தானாம் செய்தாராம்.
மொத்தத்தில் பலத்த போட்டிகளில் சுயலாபம் கருதி பல வேட்பாளர்கள் களம் இறங்கி மட்டக்களப்பு தமிழின பிரதிநிதித்துவத்தை குறைப்பது தமிழர்களாகிய நமக்கு வெட்கித்தலை குனிய வேண்டிய விடயம்.
இதனால் இப்போதும் அரசாங்கத்துடனும் சேர்ந்து தனது தனித்தன்மையை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தாங்கள் பாராளுமன்றத் தேர்தலில் முதலாவதாகக் குதிப்பதாகவும் ஆனால் தகுதியானவர்களை வேடடபாளர்களாக்கியிருப்பதும் வரவேற்கத்தக்க விடயம் தான். இருந்த போதிலும் இவர்கள் மத்தியில் இன்னமும் கருணா சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு இருப்பதால் இப்போதும் இவர்கள் தான் தமிழர் வாக்குகளை சிதறடிக்கிறார்கள் என்று முனகுவதும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அவர்கள் நிப்பாட்டிய வேட்பாளர்கள் கட்டாயம் பல முன்னெடுப்புக்களுடன் செயற்பட வாய்ப்புள்ளது. காரணம் ஏற்கனவே கிழக்கு மாகாணசபையை தன்னகத்தே கொண்டாளுவதால் இவர்களுக்கும் கணிசமான வாக்குகளும் கிடைக்கும். ஆனாலும் முதலமைச்சர் மட்டக்களப்பின் தென்பகுதிக்கும் படுவான்கரைப்பகுதிக்கும் தனது வேலைத்திட்டங்களை செயல்ப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்படுகிறது. ஆனாலும் த.வி.பு களின் தேர்தல் பிரச்சாரம் மிகவும் மும்முரமாகவும் திட்டமிட்டதாகவும் இருப்பது இவர்களின் வரலாறு புதுப்பிக்கப்படும் என்பதும் ஒரு திண்ணம்.

இதற்கிடையில் தபால் மூல வாக்களிப்பின் போது கடைசியாக வாக்களின்னும் போதுதான் நிறைய படிச்சவங்க கூட யோசிக்கும் தன்மை ஏற்பட்டதாக அந்த அரச உத்தியோகர்த்தர்கள் கூறக்கேட்டது இன்னும் மனசக் குத்திக்கிட்டு இருக்கு...
மீண்டும் கூத்தன் கூத்தாடுவான்.............